கிருஷ்ண ஜெயந்தி விழா: ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து

புதுடெல்லி,

இந்தியா முழுவதும் நாளை கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளதாவது,

சக குடிமக்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக லட்சியங்களுக்கு நம்மை அர்ப்பணிக்க இந்த மகிழ்ச்சித் திருவிழா நம்மைத் தூண்டுகிறது,ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையிலான உரையாடல் முழு மனிதகுலத்திற்கும் உத்வேகம் மற்றும் அறிவொளியின் நித்திய ஆதாரமாகும்.நாட்டின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக உழைக்க உறுதியளிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Related posts

அ.தி.மு.க. திருத்தப்பட்ட விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – தேர்தல் ஆணையத்தில் மனு

அரியானாவின் ‘பத்தாண்டுகால வலிக்கு’ காங்கிரஸ் முடிவுகட்டும் – ராகுல் காந்தி

உ.பி.யில் ஏழரை ஆண்டுகளாக எந்த வன்முறையும் இல்லை: யோகி ஆதித்யநாத் பேச்சு