கிரென்ஃபெல் கட்டட தீ விபத்து: லண்டன் அரசின் தோல்வியே காரணம்!

லண்டனின் கிரென்ஃபெல் கட்டடத்தில் நேரிட்ட தீ விபத்தில் 72 பேர் உயிரிழந்த சம்பவத்தில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு நேரிட்ட இந்த பெரும் தீ விபத்துக்கு லண்டன் அரசின் தோல்வியே காரணம் எனவும், கட்டுமான தொழில் துறை, தீப் பிடிக்கக் கூடிய வகையிலான சுவர் பூச்சுகளைக் கொடுத்த நிறுவனம் உள்ளிட்டவற்றையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

2017ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி லண்டனில் உள்ள கிரென்ஃபெல் அடுக்குமாடி குடியிருப்பில் பெரும் தீ விபத்து நேரிட்டது.

27 மாடிக் கட்டடமான கிரென்ஃபெல்லில் 120க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்துவந்தன.

கிரென்ஃபெல் கட்டடத்தில் நேரிட்ட தீ விபத்தில் சூழ்ந்த கரும்புகை

செல்வாக்குடைய மக்கள் அதிகமுடைய குடியிருப்புகளில் ஒன்றான இக்கட்டடத்தில் நேரிட்ட தீ விபத்து, 2ஆம் உலகப் போருக்கு பிறகு லண்டனில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தாக மாறியுள்ளது.

இக்கொடிய சம்பவத்தின் பின்னணியை ஆராய்ந்த பிரிட்டன் காவல் துறை, இதுவரை 58 நபர்களிடமும், 19 நிறுவனங்களிடமும் விசாரணையை மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் உயிர் பிழைத்தவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் நீதி வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

தொடர்ந்து 6 ஆண்டுகள் நடைபெற்ற விசாரணையின் முடிவில் 1,700 பக்க அறிக்கை இன்று (செப். 4) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில், இப்பெரும் தீ விபத்துக்கு லண்டன் அரசே காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டடத்தின் பாதுகாப்பை உறுதி செய்த அதிகாரிகள், நேர்மையற்ற உற்பத்தியாளர்கள், உற்பத்தி பொருள்களை கட்டுமானங்களுக்குப் பயன்படுத்தியவர்கள், தீ விபத்தின்போது முன்திட்டமிடாத தீயணைப்பு வீரர்கள் ஆகியோரே பலி எண்ணிக்கை அதிகரிக்க காரணம் எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2019-ல் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை

கிரென்ஃபெல் கட்டடத்தில் தீ பற்றியதற்கு, 4வது தளத்தில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட மின்னணு கோளாறே காரணம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

2016-ல் மறுசீரமைபின்போது கட்டடத்தின் வெளிப்பூச்சு மாற்றப்பட்டது. அது எளிதில் தீப்பற்றக்கூடிய வகையில் இருந்ததால், கட்டுப்படுத்த முடியாத வகையில் தீ பரவியதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related posts

கேரள நபருக்கு புதிய வகை குரங்கு அம்மை: நாட்டில் முதல் முறை; கண்காணிப்பு தீவிரம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 492-ஆக உயர்வு!

சென்னை உள்பட தமிழகத்தில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை