கிலோ பூண்டு ரூ.390-க்கு விற்பனை

சென்னை: கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ பூண்டு ரூ.390-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிகளவில் பூண்டு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

ஆனால், பருவநிலை மாற்றங்களால் கடந்த சில மாதங்களாகவே பூண்டு வரத்து வெகுவாகக் குறைந்ததைத் தொடா்ந்து, சில மாதங்களுக்கு முன்பு ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனையான ஒரு கிலோ பூண்டு, கடந்த 2 மாதங்களாக ரூ.300 முதல் ரூ.350-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி ஒருகிலோ முதல் தர பூண்டு ரூ.390-க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லறை விற்பனையில் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். பூண்டு விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.

Related posts

சலூன் கடைக்காரரிடம் உரையாடும் ராகுலின் விடியோ வைரல்!

சிஎஸ்கே இந்த 5 வீரர்களை தக்கவைக்கும்: ஹர்பஜன் சிங்

திராவிடநல் திருநாடு என்று சொன்னால் உங்கள் நாக்கு தீட்டாகிவிடுமா?