குஜராத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டது

குஜராத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டதுகுஜராத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டதால் பரபரப்பு நிலவியது. கோப்புப் படம்.

குஜராத் மாநிலம், ட்ங்ரி ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் திடீரென தடம் புரண்டது.

வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் பயணிகளுக்கோ அல்லது ரயில்வே ஊழியர்களுக்கோ காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

இதையடுத்து தண்டவாளங்களை சீர்செய்யும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.

மேலும் ரயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்குள்ளான ரயில் சூரத் நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மும்பையில் உள்ள மேற்கு ரயில்வே தலைமையகத்தில் ரயில்வே பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்த நேரத்தில் இந்த ரயில் தடம் புரண்டது விபத்துக்குள்ளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பங்குச் சந்தை உயர்வு: 90 சதவீத சிறு முதலீட்டாளர்களுக்கு இழப்பு – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மராத்தா இடஒதுக்கீடு விவகாரம்: 8-வது நாளாக மனோஜ் ஜரங்கே உண்ணாவிரதம்.. உடல்நிலை பாதிப்பு

3 நாள் அமெரிக்க பயணம் நிறைவு: டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி