குஜராத்தில் நடந்திருந்தால் அமித் ஷா வேதனை அடைந்திருப்பார்: மணிப்பூர் காங்கிரஸ் எம்.பி.

மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க திருத்த நடவடிக்கைகளைக் கோரி, அமித் ஷாவுக்கு காங்கிரஸ் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, உள் மணிப்பூர் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. பிமோல் அகோய்ஜாம் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,

குஜராத்தில் நடந்திருந்தால்

மணிப்பூரின் தற்போதைய நிலைமை 1947 ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினையின் நினைவுகளைத் தூண்டும் விதமாக அமைந்துள்ளது; இது வேதனையைதான் அளிக்கிறது. தற்போதைய நிர்வாகத்தின் கண்காணிப்பின்கீழ் இத்தகைய கடுமையான நெருக்கடி உருவானது வருத்தமளிக்கிறது. மேலும், குஜராத்திலும் இதேபோல் நடந்திருந்தால் அமித் ஷாவும் மிகவும் வேதனை அடைந்திருப்பார்.

எம்.பி. பிமோல் அகோய்ஜாம்

தொடரும் வன்முறை

இந்த வன்முறை நூற்றுக்கணக்கான, மதிப்புமிக்க மனித உயிர்களை இழக்கவும், சுமார் 60,000 பேர் வீடற்றவர்களாக ஆக்கவும் வழிவகுத்துள்ளது. உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கானோர், இன்னும் மோசமான நிலைமைகளின்கீழ் நிவாரண முகாம்களில் வாடுகிற போதிலும், இன்று வரையில் இந்த வன்முறை தடையின்றி நடந்து கொண்டுதான் உள்ளது. வான்வழி தாக்குதல்களின் விளைவாக உயிர்களும் சொத்துக்களும் இழக்கப்பட்டுள்ளன.

இந்த வன்முறைகளில் ஆயுதமேந்திய ட்ரோன்கள் அல்லது ஆளில்லா வான்வழி வாகனங்கள், ராக்கெட்டுகள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதவிர, மிரட்டிப் பணம் பறித்தல், பிற வகையான குற்றங்கள் பற்றிய அறிக்கைகளும் வந்துள்ளன. இதன்விளைவாக, நீண்டகால வன்முறை மற்றும் சட்டவிரோத செயல்களால் மக்களின் வாழ்வாதாரமும் மாநிலத்தின் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்க வேண்டும்

வன்முறையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படைகள் தீர்க்கமாகவும் நியாயமாகவும் செயல்படுவதை உறுதி செய்யுங்கள்.

தற்போதைய நெருக்கடியின்போது, ஒருபக்கச் சார்பான முறையில் செயல்படும் பாதுகாப்புப் படைகளின் பிரிவுகள் பற்றிய அறிக்கைகளை ஆராய்ந்து, நம்பிக்கைப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும், குற்றச்சாட்டுகள் உண்மை என்று கண்டறியப்பட்டால் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் நடவடிக்கை எடுங்கள்.

போதுமான ஆயுதப் படைகளை நிறுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை அமல்படுத்துவதன் மூலம் முழு பாதுகாப்புடன் நெடுஞ்சாலைகளில் பொருள்கள் மற்றும் மக்களின் சுதந்திரமான இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க வேண்டும்.

சந்தீப் கோஷ் மீது ஆண் செவிலியர் பாலியல் குற்றச்சாட்டு!

வரிவிலக்கு வேண்டும்

கூடுதலாக, இந்த வன்முறையால் மணிப்பூரின் பொருளாதாரம் பேரழிவிற்குள்ளானதால், வரி விலக்குகள் உள்ளிட்ட நிதி நிவாரணம் குறித்த பிரச்னையை, சம்பந்தப்பட்ட அமைச்சகத்துடன் அவசரமாக தீர்க்கவும் வேண்டும்.

தற்போதைய நெருக்கடியில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், வெளிநாட்டு சக்திகள், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்காரர்களின் தொடர்பு குறித்த குற்றச்சாட்டுகளை முழுமையாக விசாரிக்க வேண்டும்.

ஒருவேளை, அது உண்மை என்று கண்டறியப்பட்டால், அத்தகைய ஈடுபாட்டை சரிபார்க்கவும் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் நடப்பது என்ன?

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்தாண்டு மே மாதத்திலிருந்து, ஓராண்டுக்கும் மேலாக மோதல்போக்கு நீடித்து வருகிறது.

மைதேயி சமூகத்தினா் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரும் நிலையில், குகி பழங்குடியினா் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனா். இதுவே, மோதலுக்கு முக்கியக் காரணமாகும்.

இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனா். ஆயிரக்கணக்கானோர் வீடிழந்து, நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா்.

மாநிலத்தில் மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில் தெலங்கானா, ஜார்கண்டில் இருந்து 2,000 சிஆா்பிஎஃப் வீரா்கள் மணிப்பூருக்கு அனுப்ப, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

படங்கள், வெறுக்கத்தக்க பேச்சு, வெறுக்கத்தக்க விடியோக்களை பரப்புவதற்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க, மணிப்பூரில் இணைய சேவையும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், மணிப்பூரின் மூன்று மாவட்டங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில், மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே வருவதைத் தடுக்கும் வகையில், காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், தௌபாலில் பி.என்.எஸ்.எஸ். பிரிவின்கீழ் தடை உத்தரவுகள் விதிக்கப்பட்டன.

என் ஒப்புதல் இல்லாமல் விவாகரத்து அறிவிப்பு! ஜெயம் ரவி மனைவி

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!