குஜராத்தில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

குஜராத்தின் கட்ச் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் கூறுகையில்,

கட்ச் மாவட்டத்தில் காலை 10.05 மணியளவில் நிலநடுக்கம் பதிவானது, நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 3.3 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. அதன் மையம் ராபாருக்கு தென்மேற்கில் 12 கிமீ தொலைவில் அமைந்துள்ளதாக காந்திநகரை தளமாகக் கொண்ட ஐஎஸ்ஆர் தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தில் மாநிலத்தின் சௌராஷ்டிரா-கட்ச் பகுதியில் 3 ரிக்டர்களுக்கு மேல் பதிவான நான்காவது நிலநடுக்கம் இதுவாகும். நிலநடுக்கத்தால் எந்தவித உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை.

குஜராத் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தகவலின்படி, கடந்த 200 ஆண்டுகளில் ஒன்பது பெரிய நிலநடுக்கங்களைச் சந்தித்துள்ளது.

கடந்த 2001 கட்சில் 6.9 ரிக்டர் அளவிலான ஏற்பட்ட நிலநடுக்கம், இரண்டு நூற்றாண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட மூன்றாவது பெரிய மற்றும் மிகப்பெரிய அழிவுகரமான நிலநடுக்கமாகும்.

இந்த நிலநடுக்கத்தில் கிட்டத்தட்ட 13,800 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1.67 லட்சம் பேர் காயமடைந்தனர், குஜராத்தில் நிலநடுக்க அபாயம் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதமர் மோடி நம்பிக்கையை இழந்துவிட்டார்: ஜம்மு- காஷ்மீரில் ராகுல் பேச்சு!

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா சிறந்த பந்துவீச்சாளர்: ஸ்டீவ் ஸ்மித்

நியூசிலாந்து டெஸ்ட்: இலங்கை அசத்தல் வெற்றி!