குஜராத்தில் வெள்ள சேதங்களை மதிப்பிடுவதற்கு மத்திய குழு: உள்துறை அமைச்சகம்

குஜராத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக மத்திய குழு அமைத்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். இந்த குழு விரைவில் மாநிலத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்யும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, ஆகஸ்ட் 25 முதல் 30 வரை பெய்த கனமழை மற்றும் மிக கனமழைக்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டதுடன், மாநிலத்தில் உள்ள 24 ஆறுகள்; 137 நீா்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்ந்தது. நவ்சாரி, வதோதரா மற்றும் கெடா உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 15,000 போ் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனா்.

இதனிடையே கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர்.

தேசிய பேரிடா் மீட்புப் படை, மாநில பேரிடா் மீட்புப் படை, ராணுவம், இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடலோரக் காவல்படை ஆகியவை இணைந்து மாநிலத்தில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

ரயில் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் மும்பை செல்லும் வந்தே பாரத் விரைவு ரயில் உள்பட 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டது; 10 ரயில்கள் பகுதி அளவில் ரத்து செய்யப்பட்டது.

விமானப் படையின் துணைத் தளபதியாக ஏர் மார்ஷல் தேஜிந்தர் சிங் பொறுப்பேற்பு

குஜராத் மாநிலம் வதோத்ராவில் புதன்கிழமை பெய்த கன மழை காரணமாக வெள்ளக்காடாக மாறிய சாமா குடியிருப்புப் பகுதியிலிருந்து படகுகள் மூலம் மக்களை மீட்கும் ராணுவ வீரா்கள்.

மத்தியக் குழு

இந்த நிலையில், குஜராத்தில் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக மத்திய குழு அமைத்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.

தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழு விரைவில் மாநிலத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்யும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய பிரதேசமும் ராஜஸ்தானும் கனமான மழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில், கனமழை, நிலச்சரிவுகளினால் ஹிமாச்சல பிரதேசதம் அதிகயளவு பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலங்களில் மூத்த அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சகம் தொடர்பில் இருப்பதாகவும், பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.

இந்த ஆண்டு, வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அசாம், கேரளம், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு, அவர்களின் கோரிக்கைகளுக்காகக் காத்திருக்காமல் முன்கூட்டியே பயணம் செய்து சேதங்களை மதிப்பீடு செய்ய மத்தியக் குழுக்களை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. நாகாலாந்து மாநிலத்திற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு விரைவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு சென்று பார்வையிடும் என கூறப்பட்டுள்ளது.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!