குஜராத் வெள்ளத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீராங்கனை மீட்பு!

குஜராத் மழை வெள்ளத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீராங்கனை ராதா யாதவை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.

மழை வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட காணொலியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு ராதா யாதவ் நன்றி தெரிவித்துள்ளார்.

வதோதராவில் விஸ்வாமித்ர ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், நகரின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கின. வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவித்து வரும் மக்களை மீட்புப் படையினர் மீட்டு வருகின்றனர்.

வெள்ளம் பாதித்த குஜராத் குடியிருப்புப் பகுதிகளில் உலாவும் முதலைகள்!

இந்நிலையில், வதோராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை ராதா யாதவும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டுள்ளார். அதிகளவில் நீர் தேங்கிய அப்பகுதிக்குள் சென்ற மீட்புக் குழுவினர் படகு மூலம் ராதா யாதவ் உள்ளிட்டோரை மீட்டுள்ளனர்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ராதா யாதவ், மிக மோசமான சூழலில் சிக்கிய எங்களை காப்பாற்றி உணவளித்த வதோரா தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக பதிவிட்டுள்ளார்.

ராதா யாதவின் இன்ஸ்டா பதிவு

குஜராத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

தேசிய பேரிடா் மீட்புப் படை, மாநில பேரிடா் மீட்புப் படை, ராணுவம், இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடலோரக் காவல்படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

Café Review: Escape To Japan With Every Sip At Mumbai’s First Tokyo Matcha Bar In Bandra

Café Review: Escape To Japan With Every Sip At Mumbai’s First Tokyo Matcha Bar In Bandra

Citroen Launches Aircross Xplorer Limited Edition in India at Rs 8.49 Lakh