குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார் சச்சின் கிலாரி!

பாரீஸ் பாராலிம்பிக்ஸில் குண்டு எறிதலில் இந்திய வீரர் சச்சின் கிளாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

பிரான்ஸ் தலைகர் பாரீசில் பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டி 28 ஆம் தேதி முதல் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று (செப்.4) நடைபெற்ற ஆடவருக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் சச்சின் கிலாரி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

தூய்மைப் பணியாளர் வேலைக்கு 40,000 பட்டதாரிகள் விண்ணப்பம்!

எஃப் 46 பிரிவில் கலந்து கொண்ட இந்திய வீரர் சச்சின் கிலாரி 16.32 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். கனடாவின் கிரெக் ஸ்டீவர்ட்16.38 மீட்டர் தூரம் குண்டு எறிந்து தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார்.

குண்டு எறிதலில் இந்திய வீரர் ஒருவர் பதக்கம் வெல்வது 30 ஆண்டுகால பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

ஒரே நாளில் 5 பதக்கங்களை கைப்பற்றிய இந்திய வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து!

Related posts

கேரள நபருக்கு புதிய வகை குரங்கு அம்மை: நாட்டில் முதல் முறை; கண்காணிப்பு தீவிரம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 492-ஆக உயர்வு!

சென்னை உள்பட தமிழகத்தில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை