கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி காலவரையறையின்றி மூடல்!

தமிழ்த்துறை முதுகலை இரண்டாம் ஆண்டு வகுப்பில் பேராசிரியை ஒருவா், மாணவர்களை ஜாதி பிரிவினை பற்றி பேசியதாகக் கூறி கடந்த 6 நாள்களாக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கல்லூரி காலவரையறையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியை ஒருவா், மாணவா்களிடையே ஜாதி பிரிவினை பற்றி பேசியதாக கடந்த ஆக. 8-இல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினா். பின்னா் அந்த பேராசிரியை விடுப்பில் சென்றாா். ஆனாலும் துறை ரீதியாக பேராசிரியை மீது பணியிடை நீக்கம் மற்றும் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அழிக்கப்படும் நூறாண்டு மரங்கள்

இது தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படாததால், கடந்த 19-ஆம் தேதி முதல் வகுப்புகளை புறக்கணிக்கும் போராட்டத்தை தொடங்கினா். கல்லூரி 3 நாள் விடுமுறைக்கு பின்னா் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 6 -ஆவது நாளாக மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினா்.

இந்த நிலையில், கடந்த 6 நாள்களாக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கல்லூரி காலவரையறையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கல்லூரியின் அசாதாரண சூழல் கருதி கல்லூரி ஆட்சிமன்றக் குழுவின் தீர்மானத்தின்படி மறு உத்தரவு வரும் வரை கல்லூரி காவலவரையறையின்றி முடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

திரைப்பட இயக்குனர் மோகனை கைது செய்வதா? – டாக்டர் ராமதாஸ் கண்டனம்

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

‘தமிழக அமைச்சரவையில் மாற்றம்…’ – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்