கும்பகோணம் அருகே மினி லாரியும் – கல்லூரிப் பேருந்தும் மோதல்: 2 பேர் பலி

கும்பகோணம் அருகே மினி லாரியும் – கல்லூரிப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் பலியாகினர்.

கும்பகோணம் அருகே கோவிந்தபுரம் பகுதியில் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை மொத்த வியாபாரத்திற்கு பூக்கள் ஏற்றிச் சென்ற மினி லாரியும் – இதேபோல் கும்பகோணம் நோக்கி வந்த தனியார் கல்லூரிப் பேருந்தும் திங்கள்கிழமை நேருக்குநேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் மினி லாரியில் வந்த ஓட்டுநர் மற்றும் அவர் பக்கத்தில் இருந்த மற்றொருவர் என இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் விபத்தில் பேருந்தில் இருந்த தனியார் கல்லூரி மாணவர்கள், பேருந்து ஓட்டுநர் உள்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இட்லி கடை படப்பிடிப்பில் நித்யா மேனன்!

படுகாயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் தீயணைப்புத் துறையினரும் – காவல்துறையினரும் விரைந்து வந்து விபத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

தனியார் கல்லூரிப் பேருந்தின் முன் பக்க டயர் வெடித்ததால் எதிரே வந்த வாகனத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது