குரங்கம்மை: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

உலகளவில் வேகமாக பரவி வரும் குரங்கம்மை அறிகுறியுடன் இந்தியாவில் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரச வெளியிட்டுள்ளது.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், குரங்கம்மை பரவலைத் தடுக்க கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட வலியுறுத்தப்பட்டுள்ளது.

குரங்கம்மை அறிகுறி இருப்பவர்கள் அனைவருக்கும் பரிசோதனை நடத்தவும், அவர்களுடன் இருந்தவர்களுக்கும் சோதனை நடத்துவது, அனைவரையும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்துவது, குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்தவர்களுக்கு என தனி சிகிச்சைப் பிரிவு உருவாக்குதல் போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் படுதோல்வி, மணிப்பூர் மன்னிக்காது: மல்லிகார்ஜுன கார்கே

மத்திய அரசு கடிதம்

மத்திய சுகாதார செயலாளர் அபூர்வா சந்திரா, அனைத்து மாநில அரசுகளுக்கும் எழுதியிருக்கும் கடிதத்தில், குரங்கம்மை பரவலைத் தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மக்களிடையே எவ்வித அச்சமும் எழாத வகையில், முன்னெச்சரிக்கைகளையும் அரசுகள் எடுக்க வேண்டும்.

இந்தியாவில், தற்போதைக்கு எந்த புதிய நபருக்கும் குரங்கம்மை பாதித்ததாக உறுதி செய்யப்படவில்லை, அதுபோல, குரங்கம்மை அறிகுறியுடன் இருக்கும் யாருடைய மாதிரியும், மருத்துவப் பரிசோதனையில் குரங்கம்மை பாதித்ததாக கூறப்படவில்லை. எனவே, அதிக எச்சரிக்கையுடன் இருப்பதுதான் அவசியம். நிலைமையை மத்திய அரசு தொடர்ந்து கவனித்து வருகிறது.

தற்போதைக்கு, மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தும் பிரிவுகள் மற்றும் குரங்கம்மை பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவுகளை தயார் நிலையில் வைத்திருப்பது, மருந்துகளை தேவையான அளவுக்கு கையிருப்பில் வைப்பது , சிகிச்சை அளிக்கத் தேவையான மனிதவளத்தை ஏற்படுத்துவது போன்றவற்றை செய்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, வெளிநாட்டிலிருந்து திரும்பிய இளைஞருக்கு குரங்கம்மைக்கான அறிகுறிகள் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்திருந்தது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் சோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நாட்டில் எந்த அபாய நிலையும் ஏற்படவில்லை என்றும் கூறியிருந்தது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்