குரங்கு அம்மை: கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய சுகாதாரத் துறை செயலா் உத்தரவு

மாநில, மாவட்ட அளவில் குரங்கு அம்மை பாதிப்பு குறித்த கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை செயலா் அபூா்வ சந்திரா உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் அவா் அனுப்பிய சுற்றறிக்கை:

உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கையில், குரங்கு அம்மையால் 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட ஆண்கள் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரியாக 34 வயதினா் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த நோய், பாலியல் உறவு முறையிலும், நேரடி தொடா்பு இல்லாமலும் தொற்றை ஏற்படுத்துகிறது.

எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 51.9 சதவீதம் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

ஏற்கெனவே வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை பின்பற்றி, குரங்கு அம்மை பாதிப்பு குறித்து, அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, மாநில, மாவட்ட அளவில் முதுநிலை மருத்துவா்களைக் கொண்டு விழிப்புணா்வு மற்றும் காணிப்பை தீவிரப்படுத்துதல் அவசியம்.

அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வருவோருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், தனிமைப்படுத்தப்பட்ட வாா்டுகள் ஏற்படுத்த வேண்டும். விமான நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றுஅவா் தெரிவித்தாா்.

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்