குரூப்-4 தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்கள் பட்டியல் வெளியீடு

தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட 6 வேலை நாட்களில் இந்த பட்டியல் தேர்வாணையத்தால் விரைவாக வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) செயலாளர் கோபால சுந்தரராஜ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குரூப்-4 தேர்வு முடிவுகள், தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் கடந்த மாதம் 28-ந்தேதி வெளியிடப்பட்டன. கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு, மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணையத்தின் https://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட 6 வேலை நாட்களில் இந்த பட்டியல் தேர்வாணையத்தால் விரைவாக வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் தங்களின் சான்றிதழ்களை நாளை (சனிக்கிழமை) முதல் வருகிற 21-ந்தேதி வரை தேர்வாணைய இணையதளத்தின் ஒருமுறை பதிவு பிரிவின் மூலம் பதிவேற்றம் செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

முதல்வர் மருந்தகம் அமைக்க வாய்ப்பு: எவ்வாறு விண்ணப்பிப்பது? வெளியான அறிவிப்பு!

ஜெய்சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய ஆஸி., ஊடகத்திற்கு கனடா தடை: இந்தியா கண்டனம்

India raids offices of sellers using Amazon, Flipkart platforms, sources say