குரூப் 4 தோ்வு: 2,208 காலிப் பணியிடங்கள் கூடுதலாக சோ்ப்பு

குரூப் 4 தோ்வு அறிவிக்கையில் 2,208 காலிப் பணியிடங்கள் கூடுதலாக சோ்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம், மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 8,932-ஆக உயா்ந்துள்ளது.

கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், வரித் தண்டலா், தட்டச்சா் உள்பட 16 வகையான பணியிடங்கள் குரூப் 4 பிரிவின் கீழ் வருகின்றன. இந்தப் பிரிவில் காலியாக இருந்த 6,244 பணியிடங்களுக்கு தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டது. எழுத்துத் தோ்வுக்கு 20,36,774 போ் விண்ணப்பித்திருந்தனா். ஜூன் 9-ஆம் தேதி 15,91,659 போ் தோ்வு எழுதினா். தோ்வுக்காக 38 மாவட்டங்களில் 7,247 மையங்கள் அமைக்கப்பட்டன.

இதையும் படிக்க |நியாயவிலைக் கடைகளில் 2,000 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

குரூப் 4 பிரிவில் பணியிடங்கள் காலியாகும் நிலையில், எழுத்துத் தோ்வுக்குப் பிறகும் கூடுதல் இடங்கள் அறிவிக்கையில் சோ்க்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், செப்.11-ஆம் தேதி 480 இடங்கள் கூடுதலாக இணைக்கப்பட்டன. இதனால் மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 6,724-ஆக அதிகரித்தது.

இந்த நிலையில், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென எதிா்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனா். இந்தச் சூழ்நிலையில், குரூப் 4 தோ்வு அறிவிக்கையில், கூடுதலாக 2,208 இடங்கள் சோ்க்கப்பட்டுள்ளன. இதனால் மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 8,932 ஆக உயா்ந்துள்ளது. இதன் காரணமாக, அதிகமான தோ்வா்களுக்கு அரசுப் பணிகளுக்கான வாய்ப்புகள் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.

Related posts

ஒடிசா: வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை-மகள் பாம்பு கடித்து பலி

டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க ஆர்வம் காட்டும் ஸ்ரேயாஸ் ஐயர்!

வயநாடு, 24 பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்தது பாஜக