குற்றவாளிகள் பெரிய ஆள்கள் என்பதால்.. சுஷாந்த் ராஜ்புத் வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்

மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்தவர்களிடம் காட்டம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், குற்றவாளிகள் மிகப்பெரிய ஆள்கள் என்பதால்தானே என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கில், நடிகை ரியா சக்ரபர்தி மற்றும் அவரது குடும்பத்தினரை தேடப்படுவோர் பட்டியலில் சேர்த்த சிபிஐ நடவடிக்கையையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து முறையிட்டிருக்கும் சிபிஐ, மகாராஷ்டிர மாநில குடிமைப்பணிகள் துறை ஆகியவற்றை குற்றம்சாட்டியிருக்கிறது. குற்றவாளிகள் மிகப்பெரிய பின்னணி கொண்டவர்கள் என்பதால்தானே முறையீடு செய்யப்பட்டிருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்களை அற்பமான மனுக்கள் என்றும் நீதிபதிகள் அமர்வு கருத்துக் கூறியிருக்கிறது. நாங்கள் உங்களை எச்சரிக்கிறோம், குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நபர், மிகப்பெரிய பின்னணி கொண்டவர் என்பதாலேயே நீங்கள் இப்படி ஒரு அற்பமான மனுவை தாக்கல் செய்திருக்கிறீர்கள். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இரண்டு பேருமே சமூகத்தில் மிகப்பெரிய பின்னணியைக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சுஷாந்த் சிங் மரணத்தைத் தொடர்ந்து, அவரது பெண் தோழி ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினரை தேடப்படுவோர் என்று சிபிஐ அறிவித்தது. இந்த அறிவிப்பை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நடிகையும், அவரது குடும்பத்தினரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றும் கூறியிருந்தது.

இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு ரியா சக்ரவர்த்தியும் அவரது குடும்பத்தினரும் பண மோசடி வழக்கில் விசாரிக்கப்பட்டனர். அமலாக்கத்துறை நடத்தி வரும் விசாரணையில், ரியாவின் வருவாய், முதலீடுகள் தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டு வருகிறது. சட்டவிரோதமாக சுஷாந்த் வங்கிக் கணக்கிலிருந்து ரியா ரூ.15 கோடியை பரிமாற்றம் செய்ததே, நடிகரின் மரணத்துக்குக் காரணம் என்றும் குற்றம்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

சலூன் கடைக்காரரிடம் உரையாடும் ராகுலின் விடியோ வைரல்!

சிஎஸ்கே இந்த 5 வீரர்களை தக்கவைக்கும்: ஹர்பஜன் சிங்

திராவிடநல் திருநாடு என்று சொன்னால் உங்கள் நாக்கு தீட்டாகிவிடுமா?