குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப் பெருக்கு – சுற்றுலா பயணிகளுக்கு தடை

குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப் பெருக்கு – சுற்றுலா பயணிகளுக்கு தடை

தென்காசி: குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரம் அடையாததால் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நீடிக்கிறது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்யாமல் ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு புளியங்குடி, வாசுதேவநல்லூர் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்தமழை பெய்தது.

இந்நிலையில், இன்று காலையில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அவ்வப்போது மேகமூட்டம் காணப்பட்டது. மதியம் ஆம்பூர், பொட்டல்புதூர், கடையம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

குற்றாலம் பகுதியில் லேசான மழை பெய்த நிலையில், மலைப் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது. உடனடியாக பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Related posts

வேளச்சேரி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்

ரூ.100 கோடி மான நஷ்ட வழக்கு: தெலங்கானா அமைச்சா் சுரேகா மீது பிஆா்எஸ் செயல் தலைவா் தாக்கல்