கூடங்குளம் அணுமின் நிலைய முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடக்கம்

கூடங்குளம் அணுமின் நிலைய முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடக்கம்

நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலைய முதலாவது அணு உலையில் இன்று (அக்.4) காலை முதல் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முதலாம் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்பொழுது சரி செய்யப்பட்டு இன்று (அக்.4) காலை மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது.

தற்பொழுது 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று மாலைக்குள் ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படும் என கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தல் பத்திரங்கள் திட்டம்: தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் தள்ளுபடி

போக்குவரத்து விதிமீறல்; ராஜஸ்தான் துணை முதல்-மந்திரியின் மகனுக்கு ரூ.7,000 அபராதம்

ஊதிய ஒப்பந்தத்துக்கான அடுத்தகட்ட பேச்சு எப்போது? – போக்குவரத்து ஊழியர்கள் எதிர்பார்ப்பு