கூடுதலாக 20 கிடைத்திருந்தால், பாஜகவினர் சிறை சென்றிருப்பார்கள்: கார்கே

மக்களவைத் தேர்தலில் கூடுதலாக 20 இடங்களில் வெற்றி கிடைத்திருந்தால், அவர்கள் அனைவரும் சிறைக்குச் சென்றிருப்பார்கள் என பாஜகவை விமர்சிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியுள்ளார்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டு வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, "கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையுடன் இருப்பது அவசியம். பாஜகவைக் கண்டு ஆதரவாளர்கள் அஞ்சவேண்டிய தேவை இல்லை. ஆதரவாளர்கள் அனைவரும் ஒற்றுமையோடு இருந்து பலத்தை நிரூபிக்க வேண்டுமே தவிர நம்பிக்கை துரோகத்துக்கு ஆளாகக் கூடாது.

அவர்கள் (பாஜக) 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்பதை அடிக்கடி கூறி வந்தனர். ஆனால் அவர்களுக்கு 240 மட்டுமே கிடைத்தது. எங்களுக்கு கூடுதலாக 20 இடங்கள் கிடைத்திருந்தால், அவர்கள் அனைவரும் சிறைக்குச் சென்றிருப்பார்கள். அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள்தான். அதனால், அனைவருக்கும் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். போராட வேண்டுமே தவிர கோபப்படக் கூடாது.

உங்கள் அணியின் தலைவர் வலுவாகவும் அஞ்சமின்றியும் உள்ளார். இங்கு இருக்கும் அனைவருமே அச்சமற்றவர்கள்தான். ஜம்மு – காஷ்மீரின் பிரச்னைகளுக்கு உதவவும், தீர்வுகாணவும் இங்கு உள்ள தலைவர்கள் உள்ளனர். நாம் வெற்றி பெற வேண்டும். நாம் ஒன்றாக போரிட வேண்டும். ஆனால் போரின்போது, நாம் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொள்ளக்கூடாது.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

ஜம்மு – காஷ்மீரில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் காலியாக உள்ளன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், காலியாக உள்ள இடங்களை நிரப்புவோம்.

இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். இவர்கள் (பாஜக) உங்களை வறுமையிலேயே வைத்துக்கொள்ள நினைக்கிறார்கள். உங்கு ஒரு பெரிய தொழிற்சாலையைக் கூட இவர்கள் கொண்டுவரமாட்டார்கள். எந்தவொரு உற்பத்தி ஆலையும் இங்கு வராது

இதனை மாற்றுவதற்காக காங்கிரஸுக்கும் தேசிய மாநாட்டு கட்சிக்கும் நீங்கள் வாக்களிக்க வேண்டும். நாங்கள் ஆட்சி அமைத்தால் சுற்றுலா, தொழிற்சாலை, உற்பத்தி உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துவோம்" என கார்கே பேசினார்.

ஜம்மு – காஷ்மீர் தேர்தல்

ஜம்மு – காஷ்மீரில் செப்டம்பர் 18 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்குகிறது. செப்டம்பர் 25 இரண்டாம் கட்டமும், அக்டோபர் 8 – மூன்றாம் கட்டமாகவும் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்