கூட்டணி ஆட்சியில் பங்கு வேண்டும்: பழைய விடியோவைப் பகிர்ந்து டெலிட் செய்த திருமாவளவன்

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு வேண்டும், கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என முதலில் வலியுறுத்தியது விடுதலை சிறுத்தைகள் கட்சி என்று வலியுறுத்தும் விடியோவை கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ளார்.

திமுக கூட்டணிக்குள் சற்று சலசலப்பு இருக்கும் நிலையில், திடீரென, ஆட்சியில் பங்கு வேண்டும் என்று வலியுறுத்தும் பழைய விடியோ ஒன்றை திருமாவளவன் தற்போது பகிர்ந்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

திமுக கூட்டணி ஆட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கு வேண்டும் என்று திருமாவளவன் மறைமுகமாக வலியுறுத்துகிறாரா என்ற கேள்விகளும் மக்களுக்கு எழுந்துள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் விடியோவில் கூறியிருப்பதாவது, எதிர்த்துப் பேசக்கூடாது, போராடக்கூடாது, கல்வியில் உயர்ந்துவிடக் கூடாது, உயர்ந்த தகுதிக்கு வர ஆசைப்படக்கூடாது, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கக்கூடாது, தமிழகத்தில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி என்ற குரலை உயர்த்திய கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. அமைச்சரவையில் பங்கு வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும், இதற்கு முன்பு கூட்டணிக் கட்சிகள் இதனை கோரினார்களா என்று தெரியவில்லை. அதிகாரத்தில் பங்கு வேறு, தொகுதிப் பங்கு வேறு.

1999ல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தலில் அடியெடுத்து வைத்த போது வைத்த முதல் கோரிக்கை, ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதே. கடைசி மனிதனுக்கும் ஜனநயாகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என்று பேசும் விடியோவை பதிவிட்டுள்ளார்.

நெய்வேலியில் தேர்தல் கூட்டத்தில் பேசும்போதுதான் இந்த முழக்கத்தை வைத்தேன், அதிகாரத்தை மக்களிடம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய கட்சி விடுதலை சிறுத்தைகள் என்று பேசியிருந்தார்.

இந்த விடியோவை முதலில் திருமாவளவன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார். பிறகு அதனை நீக்கிவிட்டார். மீண்டும் அதனை பதிவிட்டு இரண்டாம் முறையும் அதனை நீக்கியிருக்கிறார்.

Related posts

முதல்வர் மருந்தகம் அமைக்க வாய்ப்பு: எவ்வாறு விண்ணப்பிப்பது? வெளியான அறிவிப்பு!

ஜெய்சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய ஆஸி., ஊடகத்திற்கு கனடா தடை: இந்தியா கண்டனம்

India raids offices of sellers using Amazon, Flipkart platforms, sources say