கென்யா உறைவிடப் பள்ளியில் தீ விபத்து: 17 மாணவர்கள் பலி!

கென்யாவில் உள்ள உறைவிடப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நைரியில் உள்ள ஹில்சைட் எண்டராஷா ஆரம்பப் பள்ளியில் வியாழக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் ரெசிலா ஒன்யாங்கோ தெரிவித்தார். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

கென்யா உறைவிடப் பள்ளிகளில் தீ விபத்து அடிக்கடி நிகழ்கின்றது. மாணவர்களிடையே ஏற்படும் மோதல்கள் காரணமாக இந்த தீ விபத்து ஏற்படுகிறது.

கடந்த 2017ஆம் ஆண்டு தலைநகர் நைரோபியில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது,

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி