கென்யா கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராகும் இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்

கென்யா கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

2026ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடக்க உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இந்த அணிகள் 4 குரூப்களாக பிரிக்கப்பட்டு (தலா 5 அணிகள்) லீக் சுற்றில் மோதும்.

ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 8 சுற்றில் அணிகள் இரு குரூப்பாக (தலா 4 அணிகள்) பிரிக்கப்படும். இதில் ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு (நாக் அவுட் சுற்றுக்கு) முன்னேறும்.

2026 டி20 உலகக் கோப்பையில் விளையாட இதுவரை 12 அணிகள் வாய்ப்பை பெற்றுள்ளது. இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில், எதிர்வரும் டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு கென்யா கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான தோதா கணேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை தோதா கணேஷ் தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

Privileged to be named the head coach of the Kenya cricket team. https://t.co/SHVUFFjzrL

— Dodda Ganesh | ದೊಡ್ಡ ಗಣೇಶ್ (@doddaganesha) August 14, 2024

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா