கேஜரிவாலின் ஆலோசனைக்குப் பின் காங்கிரஸ் கூட்டணி இறுதி செய்யப்படும்: ஆம் ஆத்மி!

ஹரியானா தேர்தலுக்கான கூட்டணி தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தியின் அறிக்கையை ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங் வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக சஞ்சய் கூறுகையில்,

நாங்கள் இதை வரவேற்கிறோம். பாஜகவை தோற்கடிப்பதே எங்கள் முன்னுரிமை. ஹரியாணா பொறுப்பாளர் சந்தீப் பதக், சுஷில் குப்தா ஆகியோர் இதுகுறித்து ஆலோசித்து இறுதி முடிவு எடுத்து, கேஜரிவாலுக்கு தகவல் தெரிவித்து அதன்படி முடிவு எடுக்கப்படும் என்று சஞ்சய் கூறியுள்ளார்.

பாலியல் குற்றங்களைத் தடுக்க அபராஜிதா! மேற்கு வங்க பேரவையில் மசோதா நிறைவேற்றம்!

தலைநகரில் நடைபெற்ற கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில், வரவிருக்கும் ஹரியாணா பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணிக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஹரியாணா காங்கிரஸ் தலைவர்களிடம் ராகுல் கருத்துக் கேட்டுள்ளார்.

இந்தியக் கூட்டணியாக தேர்தலில் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ராகுல் காந்தி கேட்டதாகவும், கூட்டணியின் வாக்குகள் பிரிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யக் கட்சி முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

90% பேரால் பதில் சொல்ல முடியாத ஹார்வர்டு பல்கலை.யின் கேள்வி!

ஹரியாணா பேரவைத் தேர்தலில் 90 தொகுதிகளிலும் தனது கட்சி சொந்த பலத்தில் போட்டியிடும் என்று அரவிந்த் கேஜரிவால் முன்னதாக அறிவித்திருந்தார்.

ராகுல் காந்தியின் அறிக்கைக்குப் பதிலளித்த ஹரியாணா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான பூபேந்தர் சிங் ஹூடா, ஆம் ஆத்மி கட்சிக்கு 3 முதல் 4 இடங்கள் மட்டுமே தர முடியும் என்றும், அதனால் கூட்டணி அமைப்பது கடினம் என்றும் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

கூட்டத்தில் மாநிலத்தின் 90 இடங்களின் வேட்பாளர்கள் குறித்து காங்கிரஸ் விவாதித்தது. 49 இடங்களுக்கான பெயர்களை இறுதி செய்தது, இருப்பினும், மீதமுள்ள 41 இடங்களுக்கான பெயர்களை இன்னும் இறுதி செய்யவில்லை. காங்கிரஸ் கட்சி விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என்று ஹரியானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் தீபக் பபாரியா தெரிவித்துள்ளார்.

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!