கேஜரிவால் வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

கேஜரிவால் வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!கேஜரிவாலின் மனு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது தில்லி உயர் நீதிமன்றம். அரவிந்த் கேஜரிவால்கோப்புப் படம்

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ கைது நடவடிக்கைக்கு எதிரான கேஜரிவாலின் மனுவைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது தில்லி உயர்நீதிமன்றம்.

கலால் கொள்கை வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், இடைக்கால ஜாமீன் கோரியும் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மனுக்கள் மீதான உத்தரவை தில்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை ஒத்திவைத்தது.

கேஜரிவாலின் மூத்த வழக்குரைஞர் கேஜரிவாலை சிபிஐ கைதுசெய்யப்பட்ட வழக்கில் அவரை ஜாமீனில் விடுவிக்கவும் கோரினார்.

மொஹரம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை தினத்தில் வழக்கை நடத்திய நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா, கேஜரிவால் மற்றும் சிபிஐ தரப்பு வழக்குரைஞர்கள் முன்வைத்த வாதங்களைக் கேட்டறிந்து மனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார்.

மேலும், உயர் நீதிமன்றம் அவரது வழக்கமான ஜாமீன் மனுவை ஜூலை 29 அன்று கூடுதல் வாதங்களுக்குப் பட்டியலிட்டுள்ளது.

கலால் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை இடைக்கால ஜாமீன் வழங்கியும், சிபிஐயின் கைதால் கேஜரிவால் வெளியில் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி; சித்தராமையா பதவி விலகலா…? டி.கே. சிவக்குமார் பதில்

6 வயது சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்த தலைமை ஆசிரியர் கைது

திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட் ? தேவஸ்தானம் மறுப்பு