கேஜரிவால் வீட்டிற்கு வெளியே பட்டாசு வெடிப்பு: போலீஸார் வழக்குப் பதிவு!

திகார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை வரவேற்க அவரது வீட்டிற்கு வெளியே பட்டாசு வெடித்தது தொடர்பாக தில்லி போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

கலால் கொள்கை வழக்கில் முதல்வர் கேஜரிவால் கடந்த மார்ச்சில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். முதலில் அமலாக்கத்துறையின் இந்த வழக்கிலிருந்த விடுவித்ததைத் தொடர்ந்து சிபிஐ கைது செய்தது.

ஜார்க்கண்டில் நாளை 6 வந்தே பாரத் ரயில்களைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர்!

இந்த வழக்கில் ஜாமீன் கோரிய கேஜரிவாலின் மனு செப்.13ல் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் முதல்வர் பொறுப்பில் இருக்கும் ஒருவரை 155 நாளாக காவலில் வைப்பது சட்டவிரோதமானது என்று கோரி உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் அளித்தது.

இதையடுத்து நேற்று மாலை திகார் சிறையிலிருந்து, தலைநகரின் சிவில் லைன்ஸில் உள்ள அவரது இல்லத்திற்கு வரும்போது அவரது ஆதரவாளர்களும், தெண்டர்களும் பட்டாசு வெடித்தும், இனிப்புகளைப் பரிமாறியும் கொண்டாடினர்.

அன்னபூர்ணா நிறுவனர் மன்னிப்பு கேட்டதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்

தில்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ள நிலையில், மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் தலைநகரில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், குளிர்கால மாசைக் கட்டுப்படுத்த பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்குத் தடை விதித்து கடந்த திங்களன்று தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், அரசு உத்தரவை மீறியதாகவும், முதல்வரின் வீட்டிற்கு வெளியே பட்டாசு வெடித்தது தொடர்பாக சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!