கேபினட் செயலராக தமிழகத்தை சேர்ந்த டி.வி.சோமநாதன் நியமனம்!

மத்திய அமைச்சரவை செயலாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம் : யார் இந்த டி.வி.சோமநாதன்?

மத்திய அமைச்சரவை செயலாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோமநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மத்திய அமைச்சரவை செயலாளராக டி.வி.சோமநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் இப்பதவியில் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதியில் இருந்து 2 ஆண்டுகளுக்கு நீடிப்பார் எனவும் தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சரவையின் பணி நியமன குழு, டி.வி.சோமநாதனின் நியமனத்துக்கு ஒப்புதல் அளித்திருப்பதாகவும், மத்திய அமைச்சரவை செயலகத்தின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரியாக சோமநாதன் செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

1987ஆம் ஆண்டு தமிழ்நாடு பேட்ச் அதிகாரியான இவர், மத்திய அரசின் நிதித்துறை செயலாளராக பதவி வகித்து வந்தநிலையில் தற்போது மத்திய அமைச்சரவை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பதவியில் இருந்தபோது அவரது செயலாளராக பணியாற்றியவர் டி.வி.சோமநாதன் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசின் துணைச் செயலாளர், இணை விஜிலென்ஸ் ஆணையர், மெட்ரோ வாட்டர் நிர்வாக இயக்குநர், முதலமைச்சரின் செயலாளர், கூடுதல் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

விளம்பரம்

சென்னை மெட்ரோ நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றிய சோமநாதன், மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆரம்ப டெண்டர்களை வழங்குவதற்கு முக்கிய நபராக இருந்தார்.

2019ஆம் ஆண்டு மீண்டும் மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டு, மத்திய நிதித்துறையின் செலவின பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, நிதித்துறை செயலாளர் ஆனார்.

இதையும் படிக்க:
“ஆக.15 முதல் அரசு பள்ளி மாணவர்கள் ‘ஜெய்ஹிந்த்’ சொல்வது கட்டாயம்” – ஹரியானா பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவு

பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமான அதிகாரியாக அறியப்படும் சோமநாதனின் மகள் திருமணத்திற்கு, பிரதமர் மோடியே நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார். 2025ஆம் ஆண்டு மே மாதம் ஓய்வுபெற இருந்த நிலையில், டி.வி.சோமநாதனுக்கு இந்த பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது முக்கியமானதாக கருதப்படுகிறது.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Union cabinet Ministry
,
Union Govt

Related posts

வன்முறையைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: கிரண் ரிஜிஜு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜானி மாஸ்டர்!

பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்