கேப்டன் கையை தட்டி விட்ட ஷாகீன் அப்ரிடி… பாகிஸ்தான் அணியில் விரிசலா…? – வீடியோ

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது.

ராவல்பிண்டி,

ஷாண்டோ தலைமையிலான வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வங்காளதேச அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்த பின் வெளியான ஒரு வீடியோ, அந்த அணியின் ஒற்றுமை எப்படிப்பட்டது என்றும், பாகிஸ்தான் அணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா? என எண்ணும் வகையிலும் அமைந்துள்ளது.

அந்த வீடியோவில், கேப்டன் ஷான் மசூத், வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிடியின் தோளில் கை வைத்து பேசுகிறார். அப்போது ஷாகீன், கேப்டனின் கையை தோளில் இருந்து தட்டிவிடுகிறார். இந்த சம்பவம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒற்றுமை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

When there is no unity!There is no will!#PAKvsBANpic.twitter.com/G4m2sjLyyC

— Shaharyar Azhar (@azhar_shaharyar) August 25, 2024

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா