கேரளத்தில் கனமழை நீடிக்கும்: ஐஎம்டி எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளத்தின் பல பகுதிகளில் அடுத்த ஐந்து நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) திங்கள்கிழமை எச்சரித்தது.

கேரளத்தின் பல பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. பத்தினம்திட்டா, கோட்டையம், இடுக்கி மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையும், கசரகோடைத் தவிர மீதமுள்ள மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. மேலும், அடுத்த ஐந்து நாள்களுக்கு கேரளத்தின் பல பகுதிகள், மாலத்தீவு மற்றும் லட்சத்தீவுகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என ஐஎம்டி தெரிவித்தது.

திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழை மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் ஐஎம்டி தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கண்ணூர் விமான நிலையத்தில் 93 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தானியங்கி வானிலை நிலையங்கள் மற்றும் தானியங்கி மழை அளவீடுகளின் மதிப்பீட்டின் அடிப்படையில் அதிகபட்சமாக மலப்புரம் மாவட்டத்தில் உள்ள அனக்காயம் பகுதியில் 71 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

Related posts

மனைவிக்காக 25 ஆண்டுகளாக உண்ணா நோன்பிருக்கும் பாஜக எம்.பி.!

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!

எனக்கு உந்துசக்தி தங்கை துளசிமதிதான்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்