‘கேரளம்’ ஆகிறது கேரளா : பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

‘கேரளம்’ ஆகிறது கேரளா : பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

கேரளம்

கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற, மத்திய அரசின் ஒப்புதலைப் பெற சட்டப்பேரவையில் 2ஆவது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த 1956ஆம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கேரளா உருவானது. மலையாளத்தில் இம்மாநிலத்திற்கு ‘கேரளம்’ என்று பெயர். ஆங்கிலத்தில் கேரளா என்று அழைக்கப்படுகிறது. அதேபோல அரசியலமைப்பின் முதல் அட்டவணையிலும் கேரளா என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதனை ‘கேரளம்’ என்று மாற்ற வேண்டும் என நீண்ட நாட்களாக அம்மாநில மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

விளம்பரம்

இந்நிலையில், கேரளம் பெயர் மாற்றம் கோரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அதில் சில மாற்றங்களை பரிந்துரைத்து மத்திய அரசு அதனை திருப்பி அனுப்பியது. இந்நிலையில் திருத்தப்பட்ட தீர்மானத்தை மீண்டும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் பினராயி விஜயன் முன்மொழிந்தார்.

தீர்மானத்தை சமர்ப்பித்து பேசிய அவர், அரசியலமைப்பின் மூன்றாவது பிரிவின் கீழ் ‘கேரளம்’ என திருத்தம் செய்து, அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் ‘கேரளம்’ என மறுபெயரிட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

விளம்பரம்

இதையும் படிங்க:
ஒரே நாளில் 3 உலக சாதனை – அசத்திய ரோகித் சர்மா!

இந்த தீர்மானத்துக்கு எதிர்கட்சியும் ஆதரவு தெரிவித்ததை அடுத்து பேரவை ஒருமனதாக தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதாக சபாநாயகர் ஷம்சீர் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
kerala
,
Kerala cm
,
Kerala government

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்