கேரளாவில் கோவில் மேல்சாந்திக்கு லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டபனை மேப்பாறை மகா விஷ்ணு கோவில் உள்ளது. இந்த கோவிலில் மேல்சாந்தியாக பணியாற்றி வருபவர் மதுசூதனன் (வயது 52). 20 ஆண்டுகளாக ஆன்மிக பணியில் ஈடுபடும் இவர் அடிக்கடி கேரள அரசின் லாட்டரி சீட்டுகளை எடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி பிப்டி பிப்டி லாட்டரி குலுக்கல் நடந்தது.

இதில் முதல் பரிசான ரூ.1 கோடி மேல்சாந்தி மதுசூதனனுக்கு கிடைத்தது. இதனை அறிந்த அவர் மகிழ்ச்சி அடைந்தார். ரூ.1 கோடி பரிசு விழுந்த லாட்டரி சீட்டு எப்.டி 506060 என்ற எண்ணுக்கு விழுந்திருந்தது. இதுகுறித்து மதுசூதனன் கூறுகையில், எனக்கு அடிக்கடி லாட்டரி சீட்டு எடுக்கும் பழக்கம் இருந்தது. சில நேரங்களில் சிறிய அளவிலான பரிசுகள் கிடைத்து வந்ததால், டிக்கெட் எடுக்கும் பழக்கத்தை என்னால் விட முடியவில்லை.

இந்தநிலையில் எனக்கு முதல் பரிசான ரூ.1 கோடி கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதனை அறிந்த பக்தர்களும் எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவதாக கூறினார். மதுசூதனனுக்கு ஆதிரா என்ற மனைவியும், வைஷ்ணவ் என்ற மகனும், வைகாலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

Related posts

மனைவியுடன் சேர்ந்து வாழ இடையூறு: இரட்டை கொலை செய்த தொழிலாளி

‘மதுவை ஒழிக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களை அழைத்து மாநாடு’ – ஜி.கே.வாசன் கண்டனம்

மீனவர்களுக்கு அபராதம் அதிர்ச்சி அளிக்கிறது: இலங்கை அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்