கேரளா திரையுலக பாலியல் விவகாரம்; அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி

Hema Committee: “முணு வருஷமா என்ன பண்ணீங்க..” – கேரள அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி

ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பிறகு மலையாள நடிகர்கள் மீது அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகள் கேரள திரைத்துறையில் புயலைக் கிளப்பியுள்ளது. கேரளா மட்டுமல்லாமல் மற்ற திரையுலகிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக சில நடிகைகள் அடுத்தடுத்து புகார்களை முன்வைத்து வருகின்றனர். மலையாள சினிமா துறையில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் முறைகேடு புகார்கள் தொடர்பாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை நடிகர்கள் சித்திக், முகேஷ், ஜெயசூர்யா ஆகியோர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விளம்பரம்

ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பிறகு மலையாள திரையுலகில் பலவேறு சலசலப்புகள் உருவாகியுள்ளன. அதேசமயம், ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக 6 வழக்குகள் கேரளா உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வில் விசாரிக்கப்பட்டுவருகிறது. இந்த வழக்கு விசாரணை இன்றும் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.

ஹேமா கமிட்டி தொடர்பாக கேரள உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வில் 6 வழக்குகள் விசாரிக்கப்பட்டுவருகிறது. இந்த வழக்குகளை நீதிபதிகள் ஜெயசங்கரன் நம்பியார், சுதா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்துவருகிறது. இந்தநிலையில் இன்று இந்த வழக்கு விசாரணை சிறப்பு அமர்வில் நடைபெற்றது. அப்போது கேரள அரசு ஹேமா கமிட்டியின் அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

விளம்பரம்

இன்றைய விசாரணையில் நீதிபதிகள், கேரள அரசுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பினர். அதன்படி, 2021ஆம் ஆண்டே ஹேமா கமிட்டி அறிக்கை காவல்துறை தலைவருக்கு அளிக்கப்பட்ட போதும் அறிக்கையின் மீது 3ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையையும் மாநில சிறப்பு விசாரணைக் குழுவிடம் அளிக்க வேண்டும். அறிக்கையில் உள்ள முழுமையான தகவல்களை ஆராய்ந்த பிறகே முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும், ஹேமா கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மீதான நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்கலாம் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், ஓணம் விடுமுறைக்கு பிறகு, அறிக்கையை ஆராய்வோம் என்று தெரிவித்தனர்.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
kerala
,
kerala high court
,
Latest News
,
Malluwood

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்