கேரள கலாமண்டலத்தின் வரலாற்றில் முதன்முறையாக அசைவம்!

கேரள கலாமண்டலத்தின் வரலாற்றில் முதன்முறையாக அசைவம்!சைவ உணவுகளுக்கு பதிலாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டுள்ளது

கேரளத்தின் புகழ்பெற்ற கலாமண்டத்தில் முதன்முறையாக அசைவ உணவு வழங்கப்பட்டுள்ளது.

கேரளத்தின் கலாமண்டலத்தில் தினந்தோறும் சைவ உணவுகளையே வழங்கி வருவதாகக் கூறி, மாணவர்கள் அசைவ உணவு வழங்குமாறு கோரிக்கை வைத்தனர். மாணவர்களின் இந்த கோரிக்கையை ஏற்ற கலாமண்டல நிர்வாகம், கலாமண்டலத்தின் வரலாற்றில் முதன்முறையாக கடந்த புதன்கிழமையில் (ஜூலை 10) சிக்கன் பிரியாணி வழங்கியுள்ளது.

மாணவர்களுக்கு அசைவ உணவு அளிப்பது குறித்து, இதுவரையில் எந்தவிதமான புகார்களும் பெறப்படாததால், இனிவரும் காலங்களில், மாதம் ஒருமுறை அல்லது இருமுறை அசைவ உணவு வழங்குவதற்கு ஆலோசனை நடப்பதாகக் கலாமண்டல நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த கலாமண்டலத்தில் கதகளி, மோகினியாட்டம், துள்ளல், குட்டியாட்டம், பஞ்சவாத்தியம், கர்நாடக இசை, மிருதங்கம் போன்ற பல்வேறு கலைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

Related posts

பெங்களூருவில் பயங்கரம்: முக்கியக் குற்றவாளியைக் கண்டறிந்த காவல்துறை!

நிமிர்ந்தால் ஆயிரம் கலையழகு… மீஷா ஐயர்!

காதல்ஜோடியிடம் பணம் பறிப்பு! காவலர் இடைநீக்கம்!