கைலாசா நாடு எங்கே இருக்கிறது? – நித்யானந்தா வெளியிட்ட புதிய வீடியோ!

கைலாசா நாடு எங்கே இருக்கிறது? – நித்யானந்தா வெளியிட்ட புதிய வீடியோ!

நித்யானந்தா

கைலாசா நாடு எங்கே இருக்கிறது என்பதை வருகிற 21 ஆம் தேதி அறிவிக்கப்போவதாக நித்யானந்தா வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

சர்ச்சை சாமியார் நித்யானந்தா, பாலியல் வழக்குகளில் சிக்கி சிறை செல்வார் என எதிர்பார்த்திருந்த நிலையில், திடீரென வெளிநாட்டுக்கு தப்பியோடினர். சில மாதங்களில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா என பெயர் சூட்டியதோடு எனக்கென ஒரு நாடு.. எனக்கென தனி மக்கள்.. என தனி பாஸ்போர்ட், கொடி மற்றும் ரூபாய் நோட்டுகளையும் அறிவித்து ஆச்சரியப்படுத்தினார்.

விளம்பரம்

முடிந்தால் என்னைப் பிடித்துப் பாருங்கள் என சவால் விடும் விதமாக அவ்வப்போது யூடியூப்பில் தோன்றி ஆன்மீக பேருரைகளையும் நிகழ்த்தி வந்தார். இடையில் உடல்நிலை மோசமடைந்து இலங்கையிடம் மருத்துவ உதவி கோரிய சம்பவமும் அடுத்தடுத்து அம்பலமானது. சர்ச்சைகளுக்கும், பரபரப்புக்கும் பஞ்சமே இல்லாத நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாக கூறி வருகிறார்.

ஆனால் இதுநாள் வரையில் கைலாசா நாடு எங்கே இருக்கு என நித்தி சொல்லியது இல்லை. தற்போது முதல் முறையாக வரும் 21 ஆம் தேதி கைலாசா இருக்கும் இடத்தை அறிவிக்க போவதாக நித்தியானந்தா சொல்லியிருக்கிறார். பெங்களூர் அருகே இருக்கும் பிடதியில் ஆசிரமம் தொடங்கிய நித்தியானந்தா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். தொடர்ந்து மதுரை ஆதீனத்தின் வாரிசாக தன்னை அறிவித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்த பிரச்சனைகள் ஓய்வதற்குள் பாலியல் வன்கொடுமை பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் சிக்கினார்.

விளம்பரம்

தன் மீதான வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு நித்தியானந்தா தப்பிச் சென்றார். அப்போது முதல் இப்போது வரை நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாக கூறிக்கொள்ளும் நித்தியானந்தா, தனி கொடி, பாஸ்போர்ட் ஆகியவற்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையும் படிங்க : 8 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை… 13 வயது சிறுவர்கள் வெறிச்செயல்… ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!

விளம்பரம்

அது மட்டும் இன்றி கைலாசா நாட்டில் குடியேற ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று கூட அறிவிப்பை வெளியிட்டார். இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று, தனது கைலாசா நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐநா சபை அங்கீகாரம் கொடுத்ததாக கைலாசாவின் இணைய பக்கத்தில் புகைப்படங்களை நித்தியானந்தா தரப்பு வெளியிட்டது. அதுபோக கைலாசா நாட்டின் பெருமைகள் குறித்து அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு நித்தியானந்தா ஆதரவாளர்கள் பரபரப்பை ஏற்படுத்துவதுண்டு. ஆனால் தற்போது வரை கைலாசா எந்த நாட்டின் பக்கத்தில் இருக்கிறது என்பது பற்றி நித்தியானந்தா வாய் திறக்கவில்லை.

விளம்பரம்

இந்த நிலையில், கைலாசா இருக்கும் இடத்தை வருகிற 21-ம் தேதி அறிவிக்க போவதாக நித்தியானந்தா கூறியிருக்கிறார். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கும் பதிவில், ‘கைலாசா திறக்கப்பட்டுள்ளது. வருகிற 21 ஆம் தேதி குருபூர்ணிமா நன்னாளில் கைலாசா இருக்கும் இடம் அறிவிக்கப்படும். உங்களை அன்போடு வரவேற்கிறோம், ‘கைலாசா வாசியாக இப்போதே பதிவு செய்யுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிராங்க் வீடியோ… மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன்! – என்ன நடந்தது?

விளம்பரம்

அதோடு ஒரு இணையதள லிங்க் மற்றும் வாட்ஸ் அப் எண் ஆகியவற்றையும் பகிர்ந்துள்ளனர். மேலும், நித்தியானந்தா வெளியிட்டுள்ள வீடியோவில், கைலாசா திறக்கப்பட்டுள்ளது.. மனித உடலெடுத்த எல்லோருக்கும் அழைப்பு விடுக்கிறேன்… கைலாசாவின் கதவுகள் திறந்து இருக்கின்றன. கதவை நான் திறந்தாலும் நீங்கள் கால் எடுத்து வைத்தால்தான் உள்ளே வர முடியும்" என்று நித்தி கூறியுள்ளார். ஒரு நாடு இருக்கிறதா…. இல்லையா…. என்றே இன்னும் தெரியாத நிலையில், கைலாசவாசியாக வாழ அன்போடு அழைக்கின்றோம் என மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் நித்யானந்தா.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Nithiyanadha

Related posts

2016 ஜூன் 15 கொல்லம் கலெக்டர் அலுவலக குண்டு வெடிப்பு: மதுரையை சேர்ந்த மூவர் குற்றவாளிகள்

ஆன்லைனில் கட்டிட அனுமதியை விரைவாக வழங்க வழிகாட்டுதல்: 30 நாளில் உத்தேச தடையின்மை சான்று

ரூ.158 கோடியில் தொழில்நுட்ப கட்டிடம்: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்