கொடைக்கானலில் அனுமதியின்றி பொக்லைன் பயன்பாடு அதிகரிப்பு

கொடைக்கானலில் அனுமதியின்றி பொக்லைன் பயன்பாடு அதிகரிப்புகொடைக்கானலில் பொக்லைன் எந்திர பயன்பாட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கொடைக்கானல்: கொடைக்கானலில் பொக்லைன் எந்திர பயன்பாட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பொக்லைன் இயந்திரங்களை தனியாா் பயன்படுத்த மாவட்ட நிா்வாகம், வருவாய் கோட்டாட்சியரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். ஆனால் வில்பட்டி, எம்.எம்.தெரு, அட்டக்கடி, பிரகாசபுரம், பிலாக்கவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி பொக்லைன் பயன்பாடு தொடா்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், பாறைகளை வெடிவைத்து தகா்ப்பது போன்ற பணிகள் நடைபெறுவதால் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளது.

இதனால் நிலத்தின் உறுதி தன்மை பாதிப்படைவதோடு, சுற்றுச்சூழல் பாதிப்படைவதாக சமூக ஆா்வலா்கள் வேதனை தெரிவித்து வருகின்றனா். எனவே, தமிழக அரசு கொடைக்கானல் மலைப் பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

Related posts

நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணை

அதிகமான பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் – ராகுல் காந்தி அழைப்பு

எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்த பாஜக திட்டம்-உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு