கொடைக்கானலில் டோலி கட்டி தூக்கி சென்ற பெண் சிகிச்சை பலனின்றி இறப்பு – ஆற்றை கடக்க பாலம் கட்டப்படுமா?

கொடைக்கானலில் டோலி கட்டி தூக்கி சென்ற பெண் சிகிச்சை பலனின்றி இறப்பு – ஆற்றை கடக்க பாலம் கட்டப்படுமா?

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைக் கிராமங்களில் சாலை வசதியின்றி ‘டோலி’ கட்டி தூக்கிச் சென்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொடைக்கானலை அடுத் துள்ள வெள்ளகெவி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னூர், சின்னூர் காலனி, பெரியூர் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் 100-க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள மக்களின் பிரதான தொழில் விவசாயம்தான். இக்கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாததால் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைக்கு பல கி.மீ. தூரம் வனப்பகுதி வழியாக நடந்து செல்லும் நிலை உள்ளது.

கடந்த சில நாட்களாக கொடைக் கானல் மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதற்கிடையில், சின்னூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மனைவி மாரியம்மாள் (45) என்பவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஆற்றில் வெள்ளம் சென்றதால் ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

ஆற்றில் வெள்ளம் குறைந்ததும் நேற்று முன்தினம் மாரியம்மாளை ‘டோலி’ கட்டி ஆற்றை கடந்து, சின்னையம்பாளையம் வரை தூக்கிச் சென்றனர். அங்கிருந்து ஆம்புலன்ஸில் பெரியகுளம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார்.

சின்னூர் போன்று இன்னும் சில மலைக்கிராமத்தினர் காட்டாற்றை கடந்து செல்கின்றனர். ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும்போது அவசர தேவைகளுக்காக ஆபத் தான முறையில் ஆற்றைக் கடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே, இம்மலைக் கிராமங் களில் ஆற்றைக் கடக்க பாலம் அமைத்து தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

Related posts

‘சாதி பிரிவினை மூலம் தேசபக்தியை அழிக்க காங்கிரஸ் நினைக்கிறது’ – பிரதமர் மோடி

பீகாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த நிதிஷ் குமார்

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு: 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு