கொரோனாவுக்கு பிறகு முதன்முறையாக 4 கதவுகள் திறப்பு…

கொரோனாவுக்கு பிறகு முதன்முறையாக 4 கதவுகள் திறப்பு… மீண்டும் ஜொலித்த பூரி ஜெகன் நாதர் கோயில்!

பூரி ஜெகன் நாதர் கோயில்

ஒடிசாவில் உள்ள பூரி ஜெகன்நாதர் ஆலயத்தில் கொரோனாவுக்கு பிறகு முதன் முறையாக நான்கு வாயிற்கதவுகளும் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகன்நாதர் ஆலயத்தில் சிங்க வாயில், குதிரை வாயில், புலி வாயில், யானை வாயில் என நான்கு வாயில்கள் அமைந்துள்ளன. ஆனால் கொரோனா பாதிப்பு கால கட்டத்தில், 3 வாயில்கள் மூடப்பட்டு சிங்க வாயில் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இவ்விவகாரத்தை கையில் எடுத்த பாஜக, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நான்கு வாயில்களும் மீண்டும் திறக்கப்படும் என உறுதி அளித்திருந்தது.

விளம்பரம்

அந்த வகையில் ஒடிஷாவில் பாஜக அரசு அமைந்த நிலையில் தற்போது நான்கு வாயில்களின் கதவுகளும் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். முதலமைச்சர் மோகன் சரண் மாஜி உள்ளிட்டோர் ஆலயத்திற்கு சென்று வழிபட்டனர்.

பூரி ஜெகன்நாதர் கோயிலின் பராமரிப்பு உள்ளிட்டவற்றுக்காக 500 கோடி ரூபாய் வழங்கவும் ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Puri Jagannath temple

Related posts

பெங்களூருவில் அதிர்ச்சி: இளம்பெண் உடல் 30 துண்டுகளாக பிரிட்ஜில் இருந்த கொடூரம்

“ஏழுமலையானே என்னை மன்னித்துவிடு…” – பவன் கல்யாண் பதிவு

காவல் நிலையங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நவீன் பட்நாயக்