கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆலோசகராக பிராவோ நியமனம்!

நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய ஆலோசகராக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் டுவைன் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அணியின் ஆலோசகராக இருந்த கெளதம் கம்பீர், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான நிலையில், புதிய ஆலோசகரை அணியின் நிர்வாகம் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Say hello to our new Mentor, DJ 'sir champion' Bravo!
Welcome to the City of Champions! pic.twitter.com/Kq03t4J4ia

— KolkataKnightRiders (@KKRiders) September 27, 2024

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2021ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற பிராவோ, தற்போது மேஜர் லீக் கிரிக்கெட் மற்றும் கரீபியன் பிரீமியர் லீக் தொடர்களில் மட்டும் விளையாடி வந்த நிலையில், சில மணிநேரத்துக்கு முன்பு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்திருந்தார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் பிராவோ!

ஐபிஎல் தொடரில் பிராவோ பயணம்

ஐபிஎல் தொடரில் 2008 முதல் 2022 வரை மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் லைன்ஸ் அணிகளுக்காக பிராவோ விளையாடியுள்ளார்.

மொத்தம் 161 போட்டிகளில் 1,560 ரன்களும் 183 விக்கெட்டுகளும் எடுத்து சிறந்த ஆல்-ரவுண்டராக வலம் வந்தார்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்த பிராவோ, 2023 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

Related posts

IND vs NZ, 2nd Test Preview: Wounded India Look To Bounce Back With Series On The Line In Pune

Akshay Kumar, Twinkle Khanna Make Stylish Appearance At Dimple Kapadia’s Go Noni Go Premiere In Mumbai (VIDEO)

IND vs NZ, Live Streaming & Broadcast Details: When, Where & How To Watch 2nd Test In Pune