கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு: மரபணு சோதனையில் வெளியான முக்கிய விவரம்!

கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், மரபணு சோதனையில் சஞ்சய் ராயுடன் ஒத்துப்போவதாக சிபிஐ அதிகாரிகள் கூறியிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த குற்றத்தில், சஞ்சய் ராய் ஒருவர் மட்டுமே குற்றவாளியாக இருக்க முடியும் என்றும், விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே, சஞ்சாய் ராய்க்கு எதிராக பெண் மருத்துவர் கொலை வழக்கின் குற்றப்பத்திரிகையை மிகத் துல்லியமாக தயாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் விரைவில் அதனை தாக்கல் செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சொல்லப் போனால்… ரத்தமும் தக்காளிச் சட்னியும் அதிகார பீடங்களும்!

மரபணு மற்றும் தடயவியல் சோதனைகள் மூலம், கூட்டு பாலியல் வன்கொடுமை நடைபெறவில்லை என்பதை சிபிஐ அதிகாரிகள் உறுதி செய்திருபப்தாகவும், சஞ்சய் ராய் ஒருவர் மட்டுமே இந்த குற்றத்தில் ஈடுபட்டிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கு விசாரணையில், இதுவரை வேறு யாருக்கும் தொடர்பிருப்பதற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 9ஆம் தேதி மருத்துவமனையில் பெண் மருத்துவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதற்கு மறுநாள், காவல்துறை தன்னார்வலர் சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், சஞ்சய் ராயுடன் ஒத்துப்போவது ஒன்றுதான் சஞ்சாய் ராய்க்கு எதிராக இருக்கும் மிகப்பெரிய ஒரே முக்கிய ஆதாரமாகும்.

முன்னதாக, மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவா் பற்றி தவறான கருத்துகளுடன் சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க சிபிஐயிடம் கொல்கத்தா உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி