கொல்கத்தா மருத்துவர் கொலை: நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்! -மருத்துவர்கள்

மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு எதிராக, அந்த மாநிலத்தில் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறைவிட மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை(செப்.10) மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இந்த நிலையில், பெண் மருத்துவர் கொலை வழக்கில் நீதி கிடைக்கவும், மாநில உள்துறைச் செயலர் மற்றும் மருத்துவக் கல்வித்துறை இயக்குநர் ஆகியோர் ராஜிநாமா செய்யவும் வலியுறுத்தி மேற்கு வங்கத்தில் இளம் மருத்துவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கொல்கத்தாவில் உள்ள சுகாதாரத்துறை தலைமையகத்தை நோக்கி செவ்வாய்க்கிழமை(செப்.10) பேரணியாகச் சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடவும் மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து போராடும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “எங்களது கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை, பாதிக்கப்பட்ட மருத்துவருக்கு நீதி கிட்டவில்லை. இதையடுத்து பணி புறக்கணிப்பு போராட்டத்தை தொடருவோம்” என்று தெரிவித்துள்ளனர்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்