கொல்கத்தா RG Kar மருத்துவமனை முன்னாள் முதல்வர் கைது

கொல்கத்தா RG Kar மருத்துவமனை முன்னாள் முதல்வர் கைது.. சிபிஐ சொன்ன காரணம் இதுதான்!

கொல்கத்தா RG Kar மருத்துவமனை முன்னாள் முதல்வரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

RG Kar மருத்துவமனையில் படித்து வந்த முதுநிலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிஐ, மருத்துவமனை நிதி முறைகேடுகள் குறித்தும் விசாரணை செய்து வருகிறது.

இதையும் படிக்க:
மேற்கு வங்கத்தில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்… நர்ஸிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நோயாளி!

இந்நிலையில், நிதி முறைகேடுகள் தொடர்பாக மருத்துவமனை கண்காணிப்பாளர் அளித்த புகாரின்பேரில், முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடம் விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டார்.

விளம்பரம்

இதையடுத்து, மருத்துவ மாணவி கொலையை அடுத்து RG Kar மருத்துவமனையிலிருந்து கொல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நியமிக்கப்பட்டார் சந்தீப் கோஷ். அவருக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், விடுமுறையில் சென்றார். இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
CBI
,
kolkata
,
sexual harrasment

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!