கொள்ளிடம் ஆற்றுக்குள் சாயும் நிலையில் உயர் மின்னழுத்த கோபுரம்: திருவானைக்காவலில் மின்சாரம் நிறுத்தம்

கொள்ளிடம் ஆற்றுக்குள் சாயும் நிலையில் உயர் மின்னழுத்த கோபுரம்: திருவானைக்காவலில் மின்சாரம் நிறுத்தம்

திருச்சி: கொள்ளிடம் ஆற்றுக்குள் உயர் மின்னழுத்த கோபுரம் சாயும் நிலையில் இருப்பதால் திருவானைக்காவல் உள்ளிட்ட பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் நேப்பியர் பாலம் அருகே உள்ள, ஒரு லட்சத்து 10 ஆயிரம் மெகாவாட் (110 கேவி) உயர் மின்னழுத்த ராட்சத கோபுரம், கொள்ளிடம் ஆற்றில் மிகுதியாக வரும் வெள்ளம் காரணமாக அடிப்பகுதி அரித்துச் செல்லப்பட்டது.

எப்போது வேண்டுமானாலும் மின்கோபுரம் விழும் அபாய நிலையை எட்டி உள்ளதால், திருவானைக்காவல் உள்ளிட்ட பகுதியில் காலை 7 மணியிலிருந்து மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் உள்ள ராட்சத கோபுரத்திற்கு செல்லும் மின்சாரம் நிறுத்தப்பட்டு உள்ளது. மாற்று வழியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்ரீரங்கம் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

பாசுமதி அல்லாத வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு; மத்திய அரசு அறிவிப்பு

ராஜஸ்தான்: சம்பளம் சரிவர கிடைக்காத ஐகோர்ட்டு ஊழியர் தற்கொலை; மனைவிக்கு வேலை, ரூ.10 லட்சம் இழப்பீடு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை; பாதுகாப்பு படையினர் 4 பேர் காயம்