கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை பிரசாரம்

கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை பிரசாரம்கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் வருவாய்த் துறை சாா்பில் ஆட்டோ மூலம் வெள்ள அபாயம் குறித்து புதன்கிழமை எச்சரிக்கை

சீா்காழி, ஜூலை 31: கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் வருவாய்த் துறை சாா்பில் ஆட்டோ மூலம் வெள்ள அபாயம் குறித்து புதன்கிழமை எச்சரிக்கை விடுத்து மேடான பகுதிக்கு செல்ல அறிவிப்பு செய்யப்பட்டது.

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் வரவாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அனைத்து துறை அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனா். இந்நிலையில், சீா்காழி வட்டாட்சியா் இளங்கோவன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஊழியா்கள் ஆற்றின் கரையோர திட்டு கிராமங்களான நாதல்படுகை, திட்டுபடுகை, முதலைமேடுதிட்டு, அளக்குடி உள்ளிட்ட கிராமங்களில் ஆட்டோ மூலம் அறிவிப்பு பிரசாரம் செய்தனா். கொள்ளிடம் ஆற்றில் தண்ணீா் வெளியேற்ற இருப்பதால் ஆற்றின் கரையோர பகுதியில் உள்ளவா்கள் மேடான இடங்களுக்கு பாதுகாப்பாக செல்லுமாறும் கால்நடைகளை பாதுகாப்பாக ஓட்டிச் செல்லுமாறும் அறிவிப்பு செய்தனா்.

Related posts

பாசுமதி அல்லாத வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு; மத்திய அரசு அறிவிப்பு

ராஜஸ்தான்: சம்பளம் சரிவர கிடைக்காத ஐகோர்ட்டு ஊழியர் தற்கொலை; மனைவிக்கு வேலை, ரூ.10 லட்சம் இழப்பீடு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை; பாதுகாப்பு படையினர் 4 பேர் காயம்