கோட் திரைப்படம் ரூ. 300 கோடி வசூல்..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள ‘கோட்’ திரைப்படம் கடந்த 4 நாள்களில் எத்தனை கோடி வசூலித்துள்ளது என்பது குறித்து படத்தை தயாரித்துள்ள ஏஜிஎஸ் நிறுவனம் இன்று(செப். 9) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகர் விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் வியாழக்கிழமை திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது. இந்த நிலையில், கோட் படம் திரைகளில் வெளியாகி நான்கு நாள்களில், ரூ. 288 கோடி வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Just another weekend at the box office
A total #ThalapathyTakeover@actorvijay Sir @Ags_production@vp_offl@aishkalpathi#TheGreatestOfAllTime‌#GOATpic.twitter.com/Ah3659SmOo

— Archana Kalpathi (@archanakalpathi) September 9, 2024

தமிழகத்தில் மட்டும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் இப்படத்தை கண்டு ரசிக்க பார்வையாளர்கள் அதிகளவில் வருகை தருவதால், வேலை நாளான திங்கள்கிழமையும் பல திரையரங்குகளில் கோட் படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகவே உள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்