கோட்: தெலுங்கு விநியோகஸ்தர்களுக்கு ரூ.13 கோடி நஷ்டம்!

நடிகர் விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் செப்.5ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.

கோட் படம் திரைகளில் வெளியாகி முதல் நான்கு நாள்களில், ரூ. 288 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கோட் திரைப்படத்தினால் தெலுங்கு விநியோகஸ்தர்களுக்கு ரூ.13 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மலைக்கா அரோராவின் தந்தை உடல் கூறாய்வு: காவல்துறையினர் அதிர்ச்சி தகவல்!

ரூ.13 கோடி நஷ்டம் ஏன்?

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தினால் தெலுங்கு விநியோகஸ்தர்களுக்கு ரூ.13 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களுக்கு டப்பிங் உரிமம் ரூ.16 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

கோட் திரைப்படம் தெலுங்கு மாநிலங்களில் ரூ.2.5 கோடி மட்டுமே வசூலித்துள்ளதால் சுமார் 13 கோடி ரூபாய் தெலுங்கு விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரசாந்த் நீல் கதை! பஹீரா ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இதற்கு முன்பு வெளியான விஜய் படங்கள் தெலுங்கில் நல்ல வசூல் பெற்றாலும் கோட் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை எனவும் தெரிகிறது.

6 நாள்களில் கோட் திரைப்படம் ரூ.318 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோட் படத்தில் விஜய்யுடன் சிநேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல், யோகிபாபு நடித்துள்ளார்கள். பாடலுக்கு த்ரிஷா நடனமாடியிருப்பார். சிவகார்த்திகேயன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

Related posts

தேவரா வெளியீட்டு டிரைலர்!

வார இறுதியில் சந்தித்த 3 நண்பர்கள் பலி! அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து!

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மாற்றமில்லை: பிசிசிஐ