கோட் படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்

கோட் படத்தின் டிரெய்லர் குறித்து படத்தின் தயாரிப்பாளர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் விஜய். மேலும், மகன் விஜயை ஹாலிவுட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகவும் இளமையானவராக காட்டி இருக்கிறார் வெங்கட்பிரபு. எனவே, இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது முழுவீச்சில் கிராபிக்ஸ் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

கோட் படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோட் படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், கோட் படத்தின் டிரெய்லர் குறித்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், "உங்களுக்காக டிரெய்லரை தயார் செய்து இருக்கிறோம். சில நாள்கள் பொறுமையாக இருங்கள். நாளை முறையான அறிவிப்பு வெளியாகும்" என்று தெரிவித்துள்ளார்.

We are getting an amazing trailer ready for you. So please stay calm and give us a couple of days ❤️ Will give you a proper update tomorrow #GOAT

— Archana Kalpathi (@archanakalpathi) August 12, 2024

கோட் படம் அடுத்த மாதம் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Original Article

Related posts

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வேட்டையன்: பகத் பாசிலின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

எமர்ஜென்சி ரிலீஸ்: தணிக்கை வாரியத்துக்கு கெடு விதித்த மும்பை உயர்நீதிமன்றம்!