கோட் ரூ. 200 கோடி வசூல்!

கோட் திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் வியாழக்கிழமை திரையங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.

டீஏஜிங் தொழில்நுட்பத்தைப் பிரதானமாகக் கொண்டு உருவான படமென்பதால், மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. இருப்பினும், முதல்நாள் வசூலாக உலகளவில் ரூ. 126.3 கோடி வசூலித்ததாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

வைரலான த்ரிஷா!

இந்த நிலையில், சனிக்கிழமை வரையிலான மூன்று நாளில் கோட் உலகளவில் ரூ. 200 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இன்றைய நாள் முடிவில் தமிழக வசூலாக மட்டும் ரூ. 100 கோடி ஈட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

பிரதமர் மோடி நம்பிக்கையை இழந்துவிட்டார்: ஜம்மு- காஷ்மீரில் ராகுல் பேச்சு!

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா சிறந்த பந்துவீச்சாளர்: ஸ்டீவ் ஸ்மித்

நியூசிலாந்து டெஸ்ட்: இலங்கை அசத்தல் வெற்றி!