கோபா அமெரிக்கா: 16வது முறையாக ஆா்ஜென்டீனா சாம்பியன்!

கோபா அமெரிக்கா: 16வது முறையாக ஆா்ஜென்டீனா சாம்பியன்!இந்த வெற்றியின் மூலம் 16-வது முறையாக கோபா அமெரிக்கா தொடரை ஆா்ஜென்டீனா கைப்பற்றியது. கோப்பையுடன் ஆா்ஜென்டீனா வீரர்கள்.

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் கொலம்பியாவை வீழ்த்தி ஆா்ஜென்டீனா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடாவின் மியாமி நகரில் திங்கட்கிழமை அதிகாலை நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆா்ஜென்டீனா-கொலம்பியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்க வில்லை.

இதனால் இரு அணிகளுக்கும் கூடுதல் அரை மணி நேரம் வழங்கப்பட்டது. அதில் இரு அணிகளும் கோல் அடிக்க முழு முயற்சியுடன் போராடின. இருந்தாலும் அந்த கூடுதல் நேரத்தின் முதல் 15 நிமிடத்திலும் இரண்டு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் இரண்டாவது 15 நிமிடத்தில் ஆா்ஜென்டீனா வீரர் லாடாரோ மார்டினஸ் கோல் ஒன்றை அடிக்க அந்த அணி முன்னிலைப் பெற்றது.

இதைத்தொடர்ந்து கொலம்பிய வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சி அனைத்தையும் ஆா்ஜென்டீனா வீரர்கள் சிறப்பாக விளையாடி தடுத்தனர். இறுதியில் ஆா்ஜென்டீனா அணி 1-0 என்கிற கோல் கணக்கில் சாம்பியன் பட்டம் வென்றது.

தொடரில் 5 கோல் அடித்த லாடாரோ மார்டினஸுக்கு தங்கக் காலணி விருது வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் 16-வது முறையாக கோபா அமெரிக்கா தொடரை ஆா்ஜென்டீனா கைப்பற்றியது. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற கோபா அமெரிக்கா தொடரையும் ஆா்ஜென்டீனா அணி சாம்பியன் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மும்பை: பாலியல் பலாத்கார குற்றவாளி போலீசாருடனான துப்பாக்கி சூட்டில் பலி

பலாத்காரத்திற்கு ஆளான மகளை 2 மகன்களுடன் சேர்ந்து பெற்ற தாயே தீர்த்து கட்டிய கொடூரம்

ஜம்மு காஷ்மீர் தேர்தல் – வாக்குறுதிகளை அறிவித்த ராகுல் காந்தி