கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: பிரேசில் அணியை வீழ்த்தி உருகுவே அரையிறுதிக்கு முன்னேற்றம்

தொடக்கம் முதல் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தி

டெக்சாஸ்,

உலகக் கோப்பை, யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கு அடுத்து புகழ்பெற்ற கோபா அமெரிக்க கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த 1916-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடர் வரும் ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் பிரேசில் – உருகுவே அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தின. இருப்பினும் இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை இதனால் ஆட்டம் 0-0 என டிரா ஆனது. ஆட்டம் டிரா ஆனதால் பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் 4-2 என்ற கணக்கில் உருகுவே வெற்றி பெற்றது. இதனால் உருகுவே அணி அரையிறுதிக்கு முன்னேறியது .

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

மகளிர் டி20 கிரிக்கெட்; லிட்ச்பீல்ட் அபாரம்… நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி