கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: வெனிசுலா, மெக்சிகோ அணிகள் வெற்றி

கோபா அமெரிக்க கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

சாண்டா கிளாரா,

உலகக் கோப்பை, யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கு அடுத்து புகழ்பெற்ற கோபா அமெரிக்க கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த 1916-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடர் வரும் ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் சாண்டா கிளாராவில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் வெனிசுலா – ஈகுவடார் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் ஈகுவடார் அணி ஒரு கோல் அடித்து 1-0 என முன்னிலை பெற்றது. இதையடுத்து தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தி அபாரமாக செயல்பட்ட வெனிசுலா அணி அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து 2-0 என முன்னிலை பெற்றது.

இறுதியில் ஆட்டநேர முடிவில் வெனிசுலா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதையடுத்து டெக்சாசில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் மெக்சிகோ – ஜமைக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோ வெற்றி பெற்றது.

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

மகளிர் டி20 கிரிக்கெட்; லிட்ச்பீல்ட் அபாரம்… நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி