கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: சிலி அணியை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் தொடக்கம் முதல் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தின

டெக்சாஸ்,

உலகக் கோப்பை, யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கு அடுத்து புகழ்பெற்ற கோபா அமெரிக்க கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த 1916-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடர் வரும் ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் அர்ஜென்டினா – சிலி அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தின. இதனால் முதல் பாதி 0-0 என முடிந்தது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதியில் ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் லவுட்டாரோ மார்டினஸ் கோல் அடித்தார். இதனால் ஆட்ட நேர முடிவில் 1-0 என அர்ஜென்டினா வெற்றி பெற்றது.

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

மகளிர் டி20 கிரிக்கெட்; லிட்ச்பீல்ட் அபாரம்… நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி